இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: தற்கொலை காரணம் என்ன?

5 October 2020, 7:42 pm
Quick Share

திருப்பூர்: தாராபுரம் அருகே குடும்ப பிரச்சினை காரணமாக இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சின்னக்கடைவீதியில்அரச மரம் அருகே வசிப்பவர் மயில்சாமி. இவரது மகள் சாரதாமணி தாராபுரம் தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு வீட்டில் பெற்றோருடன் வசித்து வந்தார். இந்நிலையில் மனச்சிதைவு காரணமாக திருமணம் செய்யாமல் திண்டுக்கல் மருத்துவமணை ஒன்றில் 2 வருடமாக சிகிச்சை பெற்று வந்தாக கூறப்படுகறது. இந்நிலையில் குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் சாரதா வீட்டில் யாரும் இல்லாத போது மொட்டை மாடியில் மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

அப்போது அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வருவதற்குள் உடல் முழுவதும் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் போலீசார் சாரதாமணியின் உடலை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, சாரதாமணியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 37

0

0