குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை: பெண்ணை கொலை செய்து விட்டதாக பெற்றோர்கள் குற்றச்சாட்டு

22 August 2020, 8:01 pm
Quick Share

கிருஷ்ணகிரி: ஒசூர் அரசநட்டி பகுதியில் இளம்பெண் குடும்ப பிரச்சனையால் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெண்ணின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒசூர் அரசநட்டி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (30) இவர் ஆந்திர மாநிலம் குப்பம் அருகேயுள்ள திம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த டில்லிகுமாரி (23) என்ற பெண்ணை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு 9 மாதத்தில் சுஷ்மா என்ற பெண் குழந்தை உள்ளது. விக்னேஷ்க்கும், டில்லிகுமாரிக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக நீண்ட நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று தகராறு முற்றவே டில்லிகுமாரி தனது வீட்டிலுள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட ஒசூர் சிப்காட் போலீஸார் தற்கொலை குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்து ஆந்திராவிலிருந்து வந்த டில்லிகுமாரியின் பெற்றோர் மற்றும் டில்லிகுமாரியின் இறப்பில் மர்மம் உள்ளது. அவர் தற்கொலை செய்யவில்லை, விக்னேஷூம் அவரது குடும்பத்தினரும் டில்லிகுமாரியை கொலை செய்துள்ளனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸாரிடம் புகார் தெரிவித்துள்ளனர். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆன நிலையில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஒசூர் கோட்டாச்சியர் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 0

0

0