புதிதாக அமைக்கபடும் தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் விதைபந்து வீசிய இளைஞர்கள்….

Author: Udhayakumar Raman
7 September 2021, 2:27 pm
Quick Share

அரியலூர்: வி.கைகாட்டி பகுதிகளில் புதிதாக அமைக்கபடும் தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில் இளைஞர்கள் விதைபந்து வீசினார்.

அரியலூர் மாவட்டம் நெரிஞ்சிகோரை கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் ஒன்றிணைந்து ஸ்வீட் டிரஸ்ட் பாய்ஸ் என்ற அமைப்பை உருவாக்கி மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பல்வேறு சமூக பணிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக விதைபந்துகளை உருவாக்கி வந்த நிலையில் வி.கைகாட்டி, ரெட்டிபாளையம், விளாங்குடி உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலை ஒரங்களில் தயார் செய்து வைத்திருந்த விதைபந்துகளை இன்று வீசினர். இதில் புங்கம், வேம்பு, இலுப்பை உள்ளிட்ட 1200 விதைபந்துகள் தயாரிக்கபட்டதாகவும், தற்போது அரியலூர் மாவட்டத்தில் மழை பெய்து வருவதால் விதைபந்துகள் மரமாக வளரும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

Views: - 132

0

0