தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது

15 April 2021, 7:11 pm
Quick Share

காஞ்சிபுரம்: படப்பையில் தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த படப்பை டேவிட் நகரில் வசித்து வருபவர் அமானுல்லா (25). இவர் மீது மணிமங்கலம், சோமங்கலம், ஒரகடம் ஆகிய காவல் நிலையங்களில் கொலை, மணல் கடத்தல்,கொலை முயற்சி, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இது தொடர்பாக சிறையில் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்த அமானுல்லா ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து பொதுமக்களுக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அமானுல்லாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியா மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரிக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் அமானுல்லாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Views: - 36

0

0