முன் விரோதம் காரணமாக வாலிபருக்கு அரிவாள் வெட்டு: சரித்திர பதிவேடு குற்றவாளி கைது

Author: Udayaraman
2 August 2021, 6:56 pm
Quick Share

சென்னை: சென்னை அருகே முன் விரோதம் காரணமாக வாலிபரை அரிவாளால் வெட்டிய சரித்திர பதிவேடு குற்றவாளி கைது செய்யப்பட்டனர்.

சென்னை பெரம்பூர் மகாலட்சுமி 1வது தெரு பகுதியை சேர்ந்தவர் யுவராஜ் வயது 28. இவர் போர்வெல் வேலை செய்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் உள்ள கோபால் தெருவில் வசித்து வரும் கிஷோர் என்பவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு குடிபோதையில் வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கிஷோர் தனது நண்பர்களான ஆசைத்தம்பி , கௌதம் , சந்துரு , சரத் உள்ளிட்ட 5 பேருடன் ஆட்டோவில் வந்து பெரம்பூர் ராம் தெருவில் நின்று கொண்டிருந்த யுவராஜை தலை , கால், கை என மூன்று இடத்தில் வெட்டி உள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் யுவராஜ் அதே இடத்தில் மயங்கி விழுந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டுஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் செம்பியம் உதவி கமிஷனரின் தனிப் படை போலீசார் ஆசைத் தம்பியை கைது செய்தனர்.ஆசைத்தம்பி மீது பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது .மேலும் இவர் சரித்திர பதிவேடு குற்ற வாளி. இவர் மீது வழக்கு பதிவு செய்த செம்பியம் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Views: - 70

0

0