108 ஆம்புலன்ஸ்க்கு தீ வைத்த வாலிபர் கைது

16 September 2020, 10:48 pm
Quick Share

கோவை: உக்கடம் காவல்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ்க்கு தீவைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கோவை உக்கடம் காவல் நிலையம் அருகே முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இருசக்கரவாகனத்தில் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் ஒன்று அவசர உதவிக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று இரவு காவல் நிலையம் முன்பு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது. போலீசார் உள்ளே பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது காவல் நிலையம் அருகே வாலிபர் ஒருவர் சுற்றி திரிந்துள்ளார். அப்போது அவர் காவல் நிலையம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு தீ வைத்துள்ளார். அதில் 108 ஆம்புலன்ஸ் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது.

சிறிதுநேரத்தில் வாகனம் கருகி சேதம் அடைந்தது. மேலும் அந்த வாகனத்தின் அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளும் எரிந்து சேதம் அடைந்தது. இதையறிந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்தநிலையில் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். போலீசார் விரட்டிச்சென்று அந்த வாலிபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் கேரள மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த ஜோலி என்பதும், மனநல பாதிப்பில் அவர் இவ்வாறு செயல்பட்டதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் குறீத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0