இளம் பெண்ணை கிண்டல் செய்த இளைஞர் கைது: முகநூலில் வீடியோ வெளியிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கைது

16 November 2020, 10:31 pm
Quick Share

சென்னை: சாலையில் சென்ற இளம் பெண்ணை கிண்டல் செய்த இளைஞரை கைது செய்யும் போது சாலை மறியலில் ஈடுபட்டு, முகநூலில் வீடியோ வெளியிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் சீனிவாச பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிவண்ணன். இவரது 20 வயது மகளை நேற்று முன்தினம் இரவு கருணாநிதி தெருவைச் சேர்ந்த ஆகாஷ் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவர் கிண்டல் செய்ததாக நேற்று மதியம் கொடுங்கையூர் காவல் நிலையத்தில் மணிவண்ணனின் மகள் புகார் அளித்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் உதவி ஆய்வாளர் சிவசங்கரன் மற்றும் போலீசார் கருணாநிதி தெரு பகுதிக்குச் சென்று ஆகாஷ் மற்றும் வெங்கடேசனை கைது செய்ய செல்லும் போது,

அவரது குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 20 க்கும் மேற்பட்டோர் உதவி ஆய்வாளரை சூழ்ந்து கொண்டு அவர்களை கைது செய்யக் கூடாது என்று கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் கொடுங்கையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்த காரணத்திற்காக சிற்றரசு, மோகன், அமல்ராஜ், சதாசிவம் ஆகிய 4 பேரையும் கொடுங்கையூர் போலீசார் கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் கிண்டல் செய்த பெண்னே புகாரை வாபஸ் செய்தனர். ஆனால் போலீசார் என் குடும்பத்தில் உள்ளவர்களை கைது செய்து இன்னும் எங்களிடம் காட்டவில்லை என்று மழையிலேயே தர்ணாவில் ஈடுப்பட்டனர். இதனால் காவல் நிலையம் முன்பு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.

Views: - 17

0

0