17 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட 7 பேர் அதிரடி கைது…

14 August 2020, 10:47 pm
Quick Share

கரூர்: கரூரில் 16 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட மூன்று சிறுவர்கள் உள்பட 7 நபர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில் 4 நபர்கள் குளித்தலை சிறையிலும், 3 நபர்கள் சிறுவர் சிறார் சிறையிலும் அடைத்தனர்.

கரூர் ராயனூர் அகதிகள் முகாமில் வசித்து வந்த 16 வயது சிறுமியை அப்பகுதியை சேர்ந்த, மூன்று சிறுவர்கள் உட்பட 7 இளைஞர்கள் கடத்திச் சென்று ஆபாச படம் எடுத்து அந்த சிறுமியை மிரட்டியதுடன், அவர்கள் அந்த சிறுமியுடன் இருந்த ஆபாச படத்தினை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த சிறுமியின் தாயார் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் அம்சவேணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். விசாரணையில் கரூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த அரவிந்த் (வயது 20),

வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நிஷாந்த் (வயது 18), கலைவாணன் (24), கோகுல் (20 ) மற்றும் மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து போஸ்கோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர். மேலும் கல்லுமேடு பகுதியைச் சேர்ந்த வசந்த் (வயது 20) என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர். கரூரில் 16 வயது சிறுமியை கடத்தி அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு, ஆபாச படம் எடுத்த 3 சிறுவர்கள் போஸ்கோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருப்பது. இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட 7 நபர்களில் 4 நபர்கள் குளித்தலை கிளை சிறைக்கும், மீதமுள்ள 3 சிறுவர்கள் திருச்சியில் உள்ள சிறுவர் ஜெயிலிலும் அடைக்கப்பட்டனர்.

Views: - 17

0

0