ஓட்டேரியில் வாகன சோதனையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது..

16 July 2021, 5:35 pm
Quick Share

சென்னை: சென்னையில் ஆட்டோவில் கஞ்சா கடத்திய 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

சென்னை ஓட்டேரி பிரிக்லின் ரோடு மேம்பாலம் அருகே ஓட்டேரி போலீசார் வாகன சோதனையில்  ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஆட்டோ ஒன்று வந்தது . போலீஸார் ஆட்டோவை சோதனை செய்த போது  அதில் 10 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அதனை பறிமுதல் செய்த ஓட்டேரி போலீசார் ஆட்டோவில் வந்த 4 பேரையும், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த பாலகுரு, தினேஷ் குமார், லட்சுமணன் மற்றும் சென்னை நந்தம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஜெயபால் என்பது தெரியவந்தது.

மதுரையைச் சேர்ந்த 3 பேரும் மாதத்திற்கு ஒருமுறை அங்கிருந்து கஞ்சாவை மொத்தமாக எடுத்து வந்து லாட்ஜில் ரூம் போட்டு தங்கி கஞ்சாவை சென்னையில் பலருக்கும் விற்று  மீண்டும் மதுரைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அவ்வாறு சென்னையை சேர்ந்த ஒருவருக்கு கஞ்சாவை விற்கப் போகும் போது வாகன சோதனையில் மாட்டிக்கொண்டனர் என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஓட்டேரி போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Views: - 155

0

0