முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டி படுகொலை
24 August 2020, 1:06 pmவிருதுநகர்: இராஜபாளையம் அருகே முன்விரோதம் காரணமாக வாலிபரை வெட்டி கொலை செய்த குற்றவாளியை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே சொக்கநாதன் புத்தூர் பகுதியில் வசித்து வந்தவர் கூலி தொழிலாளியான இசக்கிமுத்து. இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இசைக்கு முத்துவை பலி தீர்க்க நினைத்த மாடசாமி நேற்றிரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த இசக்கி முத்துவை அரிவாளால் வெட்டியதில் இசக்திமுத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை செய்த மாடசாமியை காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.