உயர் மின் கோபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

Author: kavin kumar
9 August 2021, 7:55 pm
Quick Share

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே உயர் மின் கோபுரத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜிபி தாங்கள் கிராமத்தில் உள்ள உயர் மின் கோபுரத்தில் இன்று காலை இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மணலூர்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அங்கு சென்று பார்த்த போது இறந்து கிடந்த நபர் லா. கூடலூர் பகுதியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்தது. பின்னர், உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞர் உயர் மின் கோபுரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 216

0

0