முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை – உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர் விசாரணை

Author: Udhayakumar Raman
16 September 2021, 2:34 pm
Quick Share

திருச்சி: திருச்சியில் முன்விரோதம் காரணமாக வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி கொட்டப்பட்டு எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சின்ராசு. இவருக்கும் பொன்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிலருக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று பொன்மலைப்பட்டி கடை வீதி பகுதியில் சின்ராசு சென்று கொண்டிருந்த போது அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வந்த நபர்கள் ஓட ஓட வெட்டி தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதனை கண்ட அப்பகுதியில் உள்ளவர்கள் அலறி அடித்துக்கொண்டு கடைகளை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர். முதல்கட்ட விசாரணையில் பொன்மலை ஆட்டோ குழந்தை என்பவரின் மகன் அலெக்ஸ்(24) என்பவர் முன்விரோதம் காரணமாக சின்ராசுவை வெட்டி கொன்றதாக விசாரணையில் தொிய வந்துள்ளது. அலெக்ஸ் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.  அப்பகுதி பேக்கரியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளை போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Views: - 163

0

0