அழிந்து வரும் தமிழகத்தின் பாரம்பரியத்தை மீட்டெடுத்த இளைஞர்கள்: ஜல்லிக்கட்டை புதுப்பிக்கும் வகையில் இன்று புதிய முயற்சி

15 January 2021, 3:39 pm
Quick Share

தருமபுரி நகர பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் எஸ்வி ரோட்டில் உள்ள குன்செட்டிகுளம் பகுதி பொதுமண்டாக கடந்த பலநூறு ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்துள்ளனர். அந்த பொது மண்டுவில் தான் பாரம்பரியமாக பொங்கல் திருவிழா கொண்டாடுவது மற்றும் தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போன்ற வீர விளையாட்டுகள் நடைபெற்று வந்ததாகவும், தற்பொழுது நாகரீக வளர்ச்சியின் காரணமாக கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேல் பாரம்பரியத்தை மறந்து குறுகிய பொங்கல் திருநாள் விழாவாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் இப்பகுதி இளைஞர்கள் தெரிவித்தனர்.

மேலும் பழமையை மீட்டெடுக்கும் வகையில் தருமபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சண்டைக்கோழி வளர்ப்பு சங்கம் சார்பில் இன்று பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் தர்மபுரி நகரப்பகுதியில் உள்ள 33 வார்டுகளுக்கும் சொந்தமான மண்டுவில் இன்று ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் தங்கள் வீடுகளில் வளர்க்கும் மாடு ஆடு போன்றவைகளுக்கும் அலங்காரம் செய்து கொம்புகளுக்கு வர்ணம் பூசி மாலை அணிவித்து பொங்கலிட்டு ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுகளுடன் ஊர்வலமாக வந்து விமர்சியாக திருவிழா கொண்டாடினர். மேலும் நாளை உழவர் திருநாளையொட்டி ஒவ்வொரு வார்டிலும் தனித்தனியாக எருதாட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை, தர்மபுரி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை மற்றும் சண்டைக்கோழி வளர்ப்பு சங்க பிரநிதிகள் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Views: - 4

0

0