விக்னேஷ் சிவனின் விலைமாதிப்பற்ற பிறந்தநாள் பரிசு – சர்ப்ரைஸ் மோடில் செம ஹேப்பி ஆன நயன்தாரா!

Author: Shree
30 November 2023, 9:04 am
nayanthara vignesh shivan
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே 9 ஸ்கின் என்ற சருமம் சார்ந்த products தொழில் ஒன்றை ஆரம்பித்தார்.

Nayanthara__Vignesh_Shivan_updatenews360

அவ்வப்போது தனது இரட்டை மகன்களுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். இந்நிலையில் அண்மையில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் விலையுயர்ந்த Maybach கார் ஒன்றை பரிசாக கொடுத்துள்ளார். இதன் விலை சுமார் ரூ. 4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நயன்தாரா அதன் லோகோவை மட்டும் படம்பிடித்து ” என் அன்பான கணவரின் இனிமையான பிறந்தநாள் பரிசுக்கு நன்றி என கூறி வாழ்த்தியுள்ளார்.

Views: - 145

0

0