ஒரே உடையில் வலம் வந்த விஜய் தேவர்கொண்டா, ராஷ்மிகா – ரகசிய காதல் அம்பலம்!

Author: Shree
30 November 2023, 6:07 pm
vijay devarkonda
Quick Share

இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார்.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் வாரிசு படத்தில் கடைசியாக நடித்திருந்தார். தொடர்ந்து தமிழ் , தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார். இவர் பிரபல தெலுங்கு இளம் நடிகர் விஜய் தேவரகொண்டாவை ரகசியமாக காதலித்து வந்ததும் அவ்வப்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து ஊர் சுற்றும் புகைப்படம் சிக்கி அவர்களின் உறவு அம்பலமானது.

ஆம், இவர்கள் இவரும் சேர்ந்து 2018ம் ஆண்டில் கீதா கோவிந்தம் படத்தில் நடித்திருந்தனர். இந்த படம் இந்திய சினிமா அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி குறித்து அப்போதே கிசுகிசுக்கள் வெளியானது. அதில் இடம்பெற்ற இன்கேம் காவாலே என்கிற பாடல் வேற லெவலில் ஹிட் ஆனது. இதனால் இவர்கள் இருவரும் ரகசியமாக காதலி வருகிறார்கள் என்று கூறப்பட்டது. அவ்வப்போது அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஏதேனும் ஆதாரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பாக பேசப்படும்.

அந்தவகையில் தற்போது ராஷ்மிகா விஜய் தேவர்கொண்டா இருவரும் தங்களது உடையை மாற்றி மாற்றி அணிந்து வெளியில் சென்ற புகைப்படங்கள் இணையவாசிகளிடம் சிக்கி வைரலாகி வருகிறது. இதன் மூலம் அவர்களது ரகசிய காதல் அம்பலமாகிவிட்டது.

Views: - 138

0

0