விக்ரமின் கிளைமாக்சில் தீ.. பற்றி எரிந்த திரையரங்கு ஸ்கிரீன்! பதறி ஓடிய ரசிகர்கள்.. வீடியோ இதோ.!

Author: Rajesh
8 June 2022, 1:08 pm
Quick Share

விஜய் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் திரை தீப்பிடிக்கும் என ஒரு பாடலில் வரும் வரி ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. அது தற்போது நிஜத்திலேயே நடந்துவிட்டது. ஆனால் இது விக்ரம் படத்திற்கு. பாண்டிச்சேரியில் ஒரு தியேட்டரில் விக்ரம் பட கிளைமாக்ஸ் காட்சியில் சூர்யா வரும்போது தியேட்டர் ஸ்கிரீன் பற்றி எரிந்திருக்கிறது.

அதை பார்த்து ரசிகர்கள் பதறி வெளியில் ஓடி இருக்கிறார்கள். தீயணைப்பு துறையினர் வருவதற்குள் மொத்த திரையும் எரிந்து சாம்பல் ஆகி இருக்கிறது. மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்து உள்ளனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

Views: - 596

0

0