பல வருடத்திற்கு பிறகு அந்த மாதிரி காட்சியில் சூர்யா? வைரல் வீடியோ இதோ.!

Author: Rajesh
3 June 2022, 1:15 pm
Quick Share

நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்கிறார் என்ற அறிவிப்பு வெளி வந்ததிலிருந்தே இப்படம் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய உயரத்தில் இருந்தது.

மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் என சிறந்த நடிகர்கள் என்று அழைக்கப்படும் அனைவருமே இப்படத்தில் இருந்தனர். சிறப்பு கதாபாத்திரத்தில் வரும் சூர்யா விக்ரம் படத்தின் அடுத்த பாகத்திற்கு லீட் கொடுக்கிறார். அந்த காட்சியில் நடிகர் சூர்யா சிகிரெட் பிடிப்பது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.பல வருடத்திற்கு பிறகு இது போன்ற காட்சியில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Views: - 664

0

0