எங்களுக்கு ரணிலும் வேண்டாம், சஜித்தும் வேண்டாம் : அடுத்த வேலை உணவுக்கு வழியில்லை என கூறி வீதியில் இறங்கி மக்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 May 2022, 4:04 pm
Columbo Protest - Updatenews360
Quick Share

இலங்கை தலைநகர் கொழும்பில் வீதியை மறித்து நடுவீதியில் டயர் எரித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதனால் சாதாரண மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆளும் ராஜபக்சே அரசு பதவி விலகக்கோரி மக்கள் போராட்டத்தில் குதித்தனர்.

ஒரு கட்டத்தில் இலங்கை முழுவதும் போராட்டம் வெடிக்கத் தொடங்கியது. இதையடுத்து மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர், எம்பி வீடு என அனைத்து இடங்களில் மக்கள் நுழைந்து போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து மகிந்த ராஜபக்சே பிரதமர் பதவியில் விலகினார். கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக ரணில் விக்கிரமசிங்கே பதவியேற்றார்.

சவாலுக்கு மத்தியில் பதவியேற்றுள்ளேன், நிச்சயம் நாடு இயல்பு நிலைக்கு திரும்பும் என அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் கொழும்பு – புதுக்கடை பகுதியில் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். தமக்கு எரிவாயு வழங்கக் கோரி வீதியை மறித்து நடு வீதியில் டயர்களை எரித்து போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது மக்கள் கூறுகையில், எமக்கு ரணிலும் வேண்டாம்,u சஜித்தும் வேண்டாம், கோட்டாகமவிற்கு செல்லவுள்ளோம். மக்கள் சாப்பிட இல்லாமல் இருக்கிறார்கள்.

25 நாட்களாக எரிவாயு வரவில்லை. மண்ணெண்ணெயும் இல்லை. நாங்கள் என்ன செய்வது. உடனடியாக எங்களுக்கு தீர்வு வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Views: - 1554

0

0