காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்து விபத்து: சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி..!

Author: Udayaraman
4 August 2021, 9:59 pm
Quick Share

காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்ரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. இதன் கிழக்கு பகுதியில் டான்கன்யிகா மாகாணத்தில் பிரபல டான்கன்யிகா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் பிரபலமாகும் என்பதால் அண்மையில் 80க்கும் மேற்பட்ட பேர் படகு சவாரி சென்றனர். ஏரியின் மையத்தில் சென்ற படகு, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதன் காரணத்தால் படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கினர்.

இதைப் பார்த்த அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்கள், நீரில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.அப்போது நீரில் தத்தளித்து கொண்டிருந்த 76 பேர் மீட்கப்பட்டனர். எனினும் சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 286

0

0