சீனாவில் எரிவாயு பைப் வெடித்து 12 பேர் உயிரிழப்பு..!

13 June 2021, 11:33 pm
Quick Share

சீனாவில் எரிவாயு பைப் வெடித்து சிதறியதில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

சீனா ஹூபேய் மாகாணத்தில் அமைந்துள்ள ஷியான் நகரில் குடியிருப்பு பகுதியில் எரிவாயு பைப் ஒன்று வெடித்து சிதறிய சம்பம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் உணவுப்பொருள் மார்க்கெட் பகுதியின் ஒரு பாகம் இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்யும் கடைக்காரர்கள் மற்றும் உணவுப்பொருள் வாங்க வந்த பொது மக்கள் என பலரும் இடி பாடுகளில் சிக்கினர்.

மேலும், இதன் சத்தத்தால் அருகில் இருக்கும் கட்டிடங்களின் ஜன்னல்கள் நொறுங்கின. இதுகுறித்து அறிந்த மீட்புக்குழுவினர், விரைவாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 138 பேர் பலத்த காயமடைந்ததாகவும் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் அங்கு வசித்த 150 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு அதிக அளவில் ரத்தம் வெளியேறியுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதன் காரணத்தால் ரத்ததானம் செய்யும்படி பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளனர்.

Views: - 223

0

0