அசுர வேகத்தில் வந்த பேருந்து..! அப்படியே பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து..! 14 பேர் பலி..!

15 December 2019, 11:34 pm
Quick Share

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 14 பேர் பலியாகினர்.

அந்நாட்டின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் உள்ள சுன்கோஷி என்ற பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. அதிவேகமாக வந்த பேருந்து எதிர்பாராத விதமாக பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.

விபத்தில் 12 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். காயம் அடைந்தவர்களை மீட்ட பொதுமக்கள் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 2 பேர் உயிரிழந்தனர்.

இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. மோசமான சாலைகளே விபத்துக்கு காரணம் என்று போலிசார் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.