அமெரிக்க கிறிஸ்துவ மதபோதகர்கள் குடும்பத்துடன் கடத்தல்: ஹைதியில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
18 October 2021, 1:41 pm
Quick Share

சான் ஜூவான்: ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும்

கரீபியன் தீவு நாடான ஹைதியில் கடத்தல் சம்பவங்கள் அதிக அளவில் நடப்பது வாடிக்கையாக இருந்து வந்தது. நாட்டின் அதிபர் ஜோவெனல் மோய்ஸ் படுகொலை, நிலநடுக்கம் போன்ற அடுத்தடுத்த அசம்பாவித நிகழ்வுகளால் சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், நேற்று மீண்டும் ஒரு கடத்தல் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதிக்கு சென்றுள்ள அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்துவ மத போதகர்கள், நேற்று தங்கள் குடும்பத்தினருடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.

செல்லும் வழியில் அவர்களை வழிமறித்த கடத்தல் கும்பல் ஒன்று, அங்கிருந்து 17 பேரையும் கூட்டாக கடத்திச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்த தகவல் தெரியவந்ததும் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த ஒரு கிறிஸ்துவ அமைப்பு, அமெரிக்காவில் உள்ள இதர கிறிஸ்துவ அமைப்புகளுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் பகிர்ந்துள்ளது.

தற்போது வரை கடத்தப்பட்டோரின் நிலைமை குறித்து எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.ஹைதியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் கடத்தப்பட்டோரைக் கண்டறியும் முயற்சிகளை துரிதப்படுத்த, ஹைதி அரசிடம் வலியுறுத்தியுள்ளனர். கடத்தப்பட்டோரை பத்திரமாக மீட்க அமெரிக்க வெளியுறவுத் துறை சார்பிலும் தொடர்ந்து முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றது.

Views: - 529

0

0