அமீரகத்தில் ஒரே நாளில் கொரோனாவால் 2,040 பேர் பாதிப்பு

Author: Udhayakumar Raman
29 June 2021, 8:14 pm
Corona Vaccine - Updatenews360
Quick Share

அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 544 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது.

அமீரக சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அமீரகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 544 டி.பி.ஐ. மற்றும் பி.சி.ஆர். பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதன் முடிவுகளில், 2 ஆயிரத்து 40 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அமீரகத்தில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 28 ஆயிரத்து 976 ஆக உயர்ந்தது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து 2 ஆயிரத்துக்கும் மேல் அதிகரித்து வருகிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று மட்டும் ஆயிரத்து 988 பேர் குணமடைந்து தங்கள் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 6 லட்சத்து 7 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக நேற்று 6 பேர் பலியானார்கள். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,802 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 19 ஆயிரத்து 568 பேர் கொரோனா பாதிப்பின் காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Views: - 225

0

0