26/11 மும்பை தாக்குதல் நினைவு தினம்..! பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேலியர்கள் வலியுறுத்தல்..!

26 November 2020, 10:34 am
Mumbai_Attack_UpdateNews360
Quick Share

26/11 மும்பை பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்வர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக இஸ்ரேலியர்கள் அஞ்சலி நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதில் படுகொலை செய்தவர்களை நீதிக்கு முன் கொண்டு வர வேண்டும் என்றும் பாகிஸ்தான் நிதியுதவியில் நடக்கும் பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் கோரினர்.

இஸ்ரேலியர்கள், இந்திய மாணவர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் நேற்று ஜெருசலேம், ரெஹோவோட் மற்றும் டெல் அவிவ் ஆகிய இடங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தினர் மற்றும் இன்று பீர்ஷேவா மற்றும் ஈலாட்டில் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

வீடியோ கான்பெரன்ஸ் மூலம் இஸ்ரேல் நேரப்படி இரவு 8 மணிக்கு நிகழ்ச்சிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்க நூற்றுக்கணக்கானவர்கள் பதிவு செய்துள்ளனர்.

“பயங்கரவாதிகளுக்கு நிதி மற்றும் தளவாட ஆதரவை வழங்கும் ஒவ்வொரு நாட்டையும் இஸ்ரேல் எதிர்க்கிறது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளை இராஜதந்திர ரீதியாகவும் நிதி ரீதியாகவும் புறக்கணிக்க அமைதியான நாடுகள் ஒன்றுபட வேண்டும். இது பயங்கரவாத செயல்களைத் தடுக்க உதவும்.” என்று தெற்கு இஸ்ரேலிய கடலோர நகரமான ஈலாட்டைச் சேர்ந்த ஐசக் சாலமன் என்பவர் தெரிவித்தார்.

“இந்தியாவைப் போன்ற ஒரு அமைதியான நாட்டை எங்கள் நண்பராக வைத்திருப்பது இஸ்ரேலியர்களான எங்களுக்கு பெருமை அளிக்கிறது. எங்கள் நட்பு தொடர்ந்து வலுவாக வளர பிரார்த்திக்கிறோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாவின் பத்து பயங்கரவாதிகள் மும்பை முழுவதும் நான்கு நாட்கள் நீடித்த 12 ஒருங்கிணைந்த துப்பாக்கிச் சூடு மற்றும் குண்டுவெடிப்புத் தாக்குதல்களை நடத்தினர். நவம்பர் 26, 2008 அன்று தொடங்கிய தாக்குதல்களில் சபாத் மாளிகையில் ஆறு யூதர்கள் மற்றும் ஒன்பது பயங்கரவாதிகள் உட்பட குறைந்தது 166 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300’க்கும் மேற்பட்டோர் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு இஸ்ரேலியர்கள், மும்பையில் நடந்த 26/11 தாக்குதலை நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய முறையில் அனுசரிப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Views: - 0

0

0