பாகிஸ்தானில் ஒரே நாளில் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

22 November 2020, 2:37 pm
Delhi Corona- Updatenews360
Quick Share

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று மேலும் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவின் பாதிப்பு பாகிஸ்தானிலும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவுவதை தடுக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தான் அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பொதுஇடங்களில் மக்கள் சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் பாகிஸ்தானில் மேலும் 2,665 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 3,74,173 ஆக உயர்ந்துள்ளது. பாகிஸ்தானில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 7,669 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 3,29,828 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது வரை 36,683 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 653 பேர் தீவிர சிகிச்சைப்பிரிவில் உள்ளனர். பாகிஸ்தானில் மாகாணங்கள் வாரியாக கொரோனா பாதிப்பு பின்வருமாறு,

சிந்து – 1,62,221, பஞ்சாப் – 114,010, கைபர்-பக்துன்க்வா- 44,097, இஸ்லாமாபாத் – 26,569, பலுசிஸ்தான்- 16,744, கில்கித்-பல்திஸ்தான்- 4,526 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 6,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Views: - 17

0

0