வியட்னாம் நிலச்சரிவுகளில் சிக்கி 27 பேர் பலி…!!

1 November 2020, 9:45 am
vietnam flood - updatenews360
Quick Share

வியட்னாமில் சூறாவளியால் கனமழை பொழிந்து, வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி இதுவரை 27 பேர் பலியாகி உள்ளனர்.

வியட்னாமில் மத்திய மற்றும் மத்திய உயர்ந்த நில பகுதிகளில் மொலாவே என்ற சூறாவளி கடுமையாக தாக்கியது. இதனால் கனமழை பொழிந்தது.

இதனை தொடர்ந்து வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளுக்கு அந்த பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால், குவாங் நாம், இன்கே ஆன், தக்லக் மற்றும் கியா லாய் ஆகிய மாகாணங்களில் 27 பேர் வரை பலியாகி உள்ளனர். 50 பேரை காணவில்லை.

மேலும், 67 பேர் காயமடைந்து உள்ளனர் என அந்நாட்டு தேசிய பேரிடர் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மத்திய செயற்குழு தெரிவித்து உள்ளது. இந்த இயற்கை பேரிடரால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்ளூர் சாலைகள் சில சேதமடைந்துள்ளன.

வீடுகளை சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் வலிமையான சூறாவளி பாதிப்புக்கு ஆளான உள்ளூர் மக்களுக்கு உதவவும், தேடுதல் மற்றும் மீட்பு பணியை மேற்கொள்ளவும் ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் என 10 ஆயிரத்து 420 பேர் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர்.

Views: - 22

0

0