முடிவுக்கு வந்த 27 வருட காதல் வாழ்க்கை : பில் கேட்ஸ் – மெலிண்டா தம்பதியினர் அதிகாரப்பூர்வமாக விவாகரத்து!!

Author: Udayachandran
3 August 2021, 7:36 pm
Bill Gates Pair Divorced - Updatenews360
Quick Share

அமெரிக்கா : மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவை அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்தார்.

அமெரிக்காவின் பிரபல மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் நிறுவனர்களின் ஒருவரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்துள்ளார்.

இது குறித்து இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் செய்லபடும் அறக்கட்டளை நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ வழிகளும் செய்து தரப்பட்டுள்ளன.

இந்த பணியில் நாங்கள் இருவரும் தொடர்ந்து பணியாற்றுவோம் என்றும் ஆனால் திருமண வாழ்வை முடித்து கொள்ள முடிவு செய்துள்ளதாகவும், எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் உள்றாக இணைந்து தம்பதியாக வளர்ச்சி காண்போம் என்ற நம்பிக்கை என தெரிவித்துள்ளனர்.

கடந்த 1975ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் தொடங்கிய காலத்தில் பில்கேட்ஸ் தலைமை செயல் அதிகாரிகயாக செயல்பட்ட அவர் பின்னர் அதன் தலைவர் மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர் ஆகிய பதவிகளையும் வகித்துள்ளார்.

அதே நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்த மெலிண்டா கேட்சை சந்தித்த பின் காதலில் விழுந்த பில் கேட்ஸ் அவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் 6 ஆண்டுகள் கழித்து மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிறுவப்பட்டு, கல்வி, பாலின சமத்துவம் மற்றும் சுகாதார நலம் போன்ற சமூக பணிகள் தொடங்கப்பட்டன.

இந்த நிலையில் 27வருட வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வர இருவரும் சம்மதித்து வாஷிங்டன் நகரில் உள்ள கிங் கவுன்டி சுப்பீரியர் நீதிமன்றத்தில் மனுவை தாக்கல் செய்தனர். இதையடுத்து இருவருக்கு விவகாரத்து இறுதி செய்யப்பட்டது குறிப்பிடதக்கது.

Views: - 410

0

0