அமெரிக்காவை உலுக்கிய பூகம்பம்..! 100 ஆண்டுகளில் இல்லாத இல்லாத வகையில் குலுங்கிய வட கரோலினா..!
10 August 2020, 5:04 pmகடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஒரு மிகப்பெரிய பூகம்பம் வட கரோலினாவை தாக்கியதில் மாநிலத்தின் பெரும்பகுதி குலுங்கியது. இதனால் வீடுகள் மற்றும் வணிக வளாகங்கள் சிறிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
கிரீன்வில்லில் உள்ள தேசிய வானிலை சேவை, 5.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் தாக்கியதாகக் கூறியது. இதையடுத்து பல மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் அல்லது காயங்கள் குறித்து உடனடியாக எந்த அறிக்கையும் வெளியாகவில்லை.
வாடா கரோலினாவைச் சேர்ந்த மைக்கேல் ஹல், ஸ்பார்டாவில் உள்ள தனது வீட்டில் தனது ஓட்டுபாதையில் நின்று கொண்டிருந்தபோது, ஒரு மான் குழு ஓடுவதைக் கவனித்தார்.
“அந்த மான் குழு கடந்து சென்று ஒரு நிமிடம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு பக்கமாக குலுங்கத் தொடங்கியது” என்று ஹல் கூறினார். “என்ன நடக்கிறது என்பதை உணர உங்களுக்கு ஒரு நிமிடம் ஆகும், அதை உங்களால் நம்ப முடியவில்லை. பின்னர் அது முடிந்துவிட்டது. கடவுள் உங்களை நோக்கி ஒரு மலையை அசைப்பதைப் போல அது சத்தமாக இருந்தது.” என ஆவர் மேலும் தெரிவித்தார்.
இதே போல் கரேன் பேக்கர் எனும் நபர், தனது கிரீன்ஸ்போரோ குடியிருப்பில், அடுக்குமாடி கட்டிடம் குலுங்குவதை உணர்ந்ததாகக் கூறினார். “சரி, துரதிர்ஷ்டவசமாக, 2020’இல் எதுவும் என்னை ஆச்சரியப்படுத்தவில்லை. ஆனால் ஒரே வாரத்தில் ஒரு சூறாவளி மற்றும் பூகம்பத்தை எதிர்கொள்வது பைத்தியமாக மாற்றுகிறது.” எனக் கூறினார்
1916’ஆம் ஆண்டில் ஸ்கைலேண்ட் அருகே 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது தான் மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பமாகும் என்று வானிலை சேவை தெரிவித்துள்ளது. அதற்கடுத்து ரிக்டர் அளவுகோலில் ஐந்துக்கும் அதிகமாக நிலநடுக்கம் பதிவாகியுள்ளது தற்போது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்ஜீனியா, தென் கரோலினா, டென்னசி உள்ளிட்ட அருகிலுள்ள மாநிலங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.