சீனாவில் அடுத்தடுத்து கடும் நிலநடுக்கம்…ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவு: மக்கள் பீதி..!!

Author: Aarthi Sivakumar
23 January 2022, 12:12 pm
Earthquake_UpdateNews360
Quick Share

பீஜிங்: சீனாவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.

சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது.

சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் வெளியிட்டுள்ள தகவலில், இந்நிலநடுக்கம் 8 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதுவரை, பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

கடந்த 12ந்தேதி சீனாவின் வடமேற்கே குயிங்காய் மாகாணத்தில் மென்யுவான் கவுன்டி பகுதியில் ரிக்டரில் 5.2 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த ஒரு மாதத்தில் அதே மாகாணத்தில் 2வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

Views: - 630

0

0