பாகிஸ்தான் பங்குச்சந்தை வளாகத்தில் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதிகள்..! பொதுமக்கள் ஐந்து பேர் பலி..!

29 June 2020, 12:01 pm
pakistan_army_Updatenews360
Quick Share

கராச்சியில், பாகிஸ்தான் பங்குச் சந்தை வளாகத்தில் திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் குறைந்தது 5 பேர் கொல்லப்பட்டனர் என அங்கிருந்து வரும்  தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தில் பயங்கரவாதிகள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். 
நான்கு பயங்கரவாதிகளில் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் இன்னும் கட்டிடத்திற்குள் இருக்கிறார். இது தொடர்பாக பாகிஸ்தான் போலிசார் கூறுகையில், தீவிரவாதிகள் கட்டிடத்தின் பிரதான வாயிலில் கையெறி குண்டு வீசி, கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் கட்டிடத்தைத் தாக்கினர் என்றனர்.

கராச்சியில் உள்ள பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தில் நடந்த தாக்குதலில் காயமடைந்தவர்களில் ஒரு போலீஸ் அதிகாரி மற்றும் ஒரு பாதுகாப்பு காவலர் ஆகியோர் கட்டிடத்தின் உள்ளே இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் பங்குச் சந்தை கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளுக்கு சீல் வைக்கப்பட்டு, காவல்துறையினர் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தீவிரவாதிகள் அதிநவீன ஆயுதங்களுடன் தாக்குதலை நடத்தியதாகவும், வெடிபொருட்களை வைத்திருந்த ஒரு பையை எடுத்துச் சென்றதாகவும் போலிசார் தெரிவித்தனர். கட்டிடத்திற்குள் உள்ள ஒரு தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Leave a Reply