அமெரிக்காவில் மேலும் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 8 ஆக உயர்வு..தீவிர கண்காணிப்பு..!!

Author: Aarthi Sivakumar
3 December 2021, 8:50 am
omicron - updatenews360
Quick Share

வாஷிங்டன்: நியூயார்க் மாகாணத்தில் 5 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

2019ம் ஆண்டு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பல்வேறு உருமாற்றமடைந்து வேகமாக பரவி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் மேலும் உருமாற்றமடைந்து, ஒமைக்ரான் என்ற புதியவகை வைரஸாக உருமாற்றமடைந்தது.

ஒமிக்ரான் கொரோனா வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரான் வைரஸ் அதிவேகமாக பரவக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் 50 உருமாற்றங்களை கொண்டுள்ளதால், அதிவேகமாக பரவக்கூடியதாக இருக்கலாம் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இந்த ஒமைக்ரான் வைரஸ் இந்தியா உள்பட 29க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இந்நிலையில், ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவிலும் பரவத்தொடங்கியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 8 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், நியூயார்க் மாகாணத்தில் மட்டும் 5 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண மேயர் தெரிவித்துள்ளார்.

Views: - 479

0

0