தண்ணீருக்குள் உங்களால் எவ்வளவு நேரம் மூச்சு பிடிக்க முடியும்? இந்த 54 வயது மனிதரை பாருங்கள்..

1 April 2021, 8:45 am
Quick Share

குரோஷியாவை சேர்ந்த புடிமிர் புடா என்ற 54 வயது மனிதர், தண்ணீருக்கு அடியில் 24 நிமிடங்கள் 33 நொடிகள் மூச்சு பிடித்து தனது சொந்த சாதனையை முறியடித்து இருக்கிறார்.

நாம் சிறுவயதில் ஆறு அல்லது கிணற்றில் குளிக்க சென்றால், நண்பர்களுடன் இணைந்து, நீருக்குள் யார் அதிக நேரம் ‘தம்’ பிடிப்பது என்று விளையாடி இருப்போம். 90ஸ் கிட்ஸ் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும். நாம் அதிகபட்சம் 30 வினாடிகள், ஒரு நிமிடம், ஒன்றறை நிமிடம் வைத்திருப்போம். அதிக பயிற்சி செய்திருந்தால் அதிகபட்சம் 3 நிமிடம் தண்ணீருக்குள் ‘தம்’ பிடிக்கலாம்.. ஆனால் குரேஷியாவை சேர்ந்த ஒரு மனிதர் தண்ணீருக்குள் எவ்வளவு நேரம் மூச்சு பிடித்திருந்தார் தெரியுமா? 24 நிமிடங்கள்… ஆ.. என வாயை பிளக்கிறீர்களா…!!

குரோஷியா நாட்டை சேர்ந்தவர் புடிமிர் புடா ஓபார் (வயது 54) இவர் தண்ணீருக்குள் ‘தம்’ பிடிக்கும் தனது முந்தைய சாதனையை முறியடித்து, புதிய கின்னஸ் உலக சாதனை படைத்திருக்கிறார். சோப்பக்கிலுள்ள நீச்சல் குளம் ஒன்றில் அவர் தனது புதிய சாதனையை, அதிகாரிகளின் மேற்பார்வையில் நிகழ்த்தி காட்டினார். சாதனை படைக்கும் அவரது முயற்சியை, அவரின் நண்பர்களும், பத்திரிக்கை உறுப்பினர்களும் நேரில் கண்டனர்.

தலையை நீருக்கடியில் மூழ்கச் செய்வதற்கு முன், தூய்மையான ஆக்ஸிஜனை ஹைப்பர்வென்டிலேட் செய்து, தனது உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து கொண்டார். அவரது முந்தைய உலக சாதனையான 24 நிமிடம் 11 நொடிகள் நீருக்குள் மூச்சு பிடித்து வைத்திருந்த சாதனையை, தற்போது அவர் முறியடித்து, 24 நிமிடம் 33 நொடிகள் மூச்சுபிடித்து புதிய கின்னஸ் உலக சாதனை படைத்தார்.

பெருமூளை வாதம், மன இறுக்கம் மற்றும் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் தனது 20 வயது மகள் சாசா, ஊக்கமளித்ததாக புடிமிர் தெரிவித்தார்.

Views: - 0

0

0

Leave a Reply