தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 6.5 ஆக பதிவு…பீதியில் மக்கள்..!!
Author: Aarthi Sivakumar24 October 2021, 2:40 pm
தைபே: தைவானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தைவானில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள், வீடுகள் குலுங்கியதால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்க ஆய்வியல் மையம் தரப்பில் கூறுகையில்,
தைவானில் வடகிழக்கு யிலான் மாவட்டத்தை பிற்பகல் 1:11 மணிக்கு 42 மைல் ஆழத்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆகவும், இது 67 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக ஏற்பட்ட சக்தி வாய்ந்த அதிர்வுகள் தலைநகர் தைபே வரையும் உணரப்பட்டது என்று தெரிவித்துள்ளது. ஆனால் தைவானின் மத்திய வானிலை ஆய்வு மையம் நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட உயிரிழப்புகள், பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை. தைவானில் கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவான நிலநடுக்கத்தில் 17 பேர் பலியானதுடன், 300 பேர் வரை காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
0
0