காபூல் விமான நிலையத்தில் மீண்டும் கூட்டநெரிசல்: ஆப்கனை சேர்ந்த 7 பேர் பலியானதாக தகவல்..!!

Author: Aarthi Sivakumar
22 August 2021, 5:35 pm
Quick Share

காபூல்: காபூல் விமான நிலையத்தில் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 ஆப்கானிஸ்தானியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் நடந்த உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளனர். இது உலகளவில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. தலீபான்களால் எந்த நேரமும் எதுவும் நேரலாம் என்ற பீதியில் ஆப்கனியர்களும், உலக மக்களும் உள்ளனர்.

இதனால் அங்குள்ள வெளிநாட்டினர் தங்கள் தாய்நாட்டுக்கு திரும்பி விட வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். தலீபான்கள் ஆட்சிக்கு பயந்து ஆப்கானிஸ்தான் மக்கள் சிலரும் வெளிநாடுகளுக்கு தப்ப முயன்று வருகின்றனர். இதனால், காபூல் விமான நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படுகிறது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆப்கானிஸ்தான் மக்கள் 7 பேர் உயிரிழந்ததாக பிரிட்டன் பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே அச்சுறுத்தல் இருப்பதால் அமெரிக்க மக்கள் காபூல் விமான நிலையத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அமெரிக்க தங்கள் நாட்டு மக்களுக்கு பயண எச்சரிக்கை விடுத்துள்ளது.

Views: - 211

0

0