ஓமன் நாட்டில் புதிதாக 772 பேருக்கு கொரோனா: ஒரே நாளில் 12 பேர் பலி..!!

7 May 2021, 12:35 pm
omen coorna - updatenews360
Quick Share

மஸ்கட்: ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், 772 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 344 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,149 பேர் குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 696 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 91.1 சதவீதமாக உள்ளது. கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் 12 பேர் பலியானார்கள். இதனால் ஓமனில் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2,083 ஆக அதிகரித்தது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 283 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 122

0

0