80 அடி உயரத்தில் விபரீத விளையாட்டு : உயிரை ஊசலாட வைத்த ஊஞ்சல்.!! (வீடியோ)

21 May 2020, 12:36 pm
Iceland Swing - Updatenews360
Quick Share

புவேர்ட்டோ ரிக்கோ : அடுக்குமாடி குடியிருப்பில் தனது குழந்தையை ஒருவர் ஊஞ்சலாட வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி கண்டனங்களை குவித்து வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஐஸ்லாந்து நாட்டில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்த அடுக்குமாடி குடியிருப்பின் எட்டாவது மாடியில் ஒரு நபர் குழந்தையை வைத்துக் கொண்டு மிக வேகமாக அந்த ஊஞ்சலை ஆட்டுகிறார்.

அவர் ஊஞ்சலை வேகமாக இயக்குவதும் அந்த குழந்தை பால்கனியின் விளிம்பு வரை சென்று வரும் காட்சிகளை அப்பகுதி வாசிகள் வீடியோவாக எடுத்து வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த அபாயமான விளையாட்டு தேவையா, அந்த குழந்தையின் உயிர் ஊசலாடுவது போல் உள்ளது என நெட்டிசனக்ள் சரமாரியாக திட்டி பதிவிட்டு வருகின்றனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் எட்டவாது மாடியில் இருந்து தரைத்தளத்திற்கு கிட்டத்தட்ட 80 அடி உள்ளது. ஆபத்தை உணராமல் அந்த நபர் குழந்தையை ஊஞ்சலாட வைத்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி பலர் கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

80 அடி உயரத்தில் விபரீத விளையாட்டு.!! உயிரை ஊசலாட வைத்த ஊஞ்சல்.!!

80 அடி உயரத்தில் விபரீத விளையாட்டு.!! உயிரை ஊசலாட வைத்த ஊஞ்சல்.!!மேலும் பல செய்திகளை தெரிந்துகொள்ள -https://www.updatenews360.com/

Update News 360 यांनी वर पोस्ट केले बुधवार, २० मे, २०२०