சீனாவில் 6 பேருக்கு கொரோனா உறுதி: 90 லட்சம் கொரோனா பரிசோதனை இலக்கு..!!

By: Aarthi
12 October 2020, 2:11 pm
china-updatenews360
Quick Share

சீனாவில் 6 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து நகரம் முழுவதும் 5 நாட்களுக்குள் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பீஜிங்: 6 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, 5 நாட்களுக்குள் சீனாவின் துறைமுக நகரமான கிங்டாவோவில் 90 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா சோதனை நடத்த சீனா இலக்கு வைத்துள்ளது என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Corona_Test_UpdateNews360

கொரோன வைரஸ் கண்டறியப்பட்ட சீனாவில் பெரும்பாலும் நோய் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் உலகின் பல பகுதிகள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

94 லட்சம் மக்கள் உள்ள சீனாவின் கிங்டாவோவில் நேற்று 6 பேருக்கு கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதனை கிங்டாவோ நகராட்சி சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் ஐந்து மாவட்டங்கள் 3 நாட்களுக்குள்ளும், முழு நகரமும் 5 நாட்களுக்குள்ளும் கொரோனா பரிசோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 40

0

0