13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ: 46 பேர் உயிரை பறித்த கோரவிபத்து…தைவானில் சோகம்..!!

Author: Aarthi Sivakumar
15 October 2021, 9:45 am
Quick Share

தைபே: தைவானின் கவோசியுங் நகரில் உள்ள 13 மாடி கட்டடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 46 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தைவான் நாட்டு நேரப்படி, இன்று அதிகாலை 3 மணியளவில் 13 மாடி கட்டடத்தில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. தீ மளமளவென பரவியதால், அடுத்தடுத்து தளங்களுக்கும் பரவியது. இதனால், கரும்புகை வான் வரை பவியது.


இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து மீட்டு பணியில் ஈடுபட்டனர். பலமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு தீ அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 46 பேர் உயிரிழந்ததும், 41 பேர் காயமடைந்துள்ளதையும் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

இந்த கட்டடத்தில் முதல் 5 தளங்கள் வணிக பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டிருந்தது. தீ விபத்து ஏற்பட்ட போது அங்கு யாரும் இல்லை. 7 முதல் 11 தளங்களில் இருந்தவர்கள் தான் அதிகளவில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 762

0

0