25 காரில் வந்த 80 பேர்: கண்ணிமைக்கும் நேரத்தில் சூறையாடப்பட்ட சூப்பர் மார்க்கெட்…சான்பிரான்சிஸ்கோவில் அதிர்ச்சி..!!

Author: Aarthi Sivakumar
22 November 2021, 6:05 pm
Quick Share

கலிபோர்னியா: சான்பிரான்சிஸ்கோ நகரில் 25 கார்களில் வந்த 80 முகமூடி நபர்கள் சூப்பர் மார்க்கெட்டிக்குள் நுழைந்த கையில் கிடைத்ததையெல்லாம் கொள்ளைடியத்துச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகரில், நார்ட்ஸ்ட்ரோம் என்ற சூப்பர் மார்க்கெட் உள்ளது. வால்நட் கிரீக் பகுதியில் உள்ள அந்த கடையில் கடந்த சனிக்கிழமை பெரும் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

25 கார்களில் முகமூடி அணிந்த 80 நபர்கள் திடீரென சூப்பர் மார்க்கெட்டி வாசலில் வந்து நின்றுள்ளனர். கைகளில் ஆயுதங்களுடன் நார்ட்ஸ்ட்ரோம் அங்காடிக்குள் நுழைந்த அவர்கள், கைகளில் கிடைத்த பொருட்களை எல்லாம் கொள்ளையடித்தனர்.

இதனை தடுக்க முயன்ற 2 பேரை சரமாரியாக தாக்கிய கொள்ளையர்கள், ஒருவர் முகத்தில் மிளகு ஸ்பிரே அடித்து காயப்படுத்தினர். காயமடைந்த மூவருக்கும் சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், கண் இமைக்கும் நேரத்தில் அவர்கள் காரில் தப்பி சென்றனர். அப்போது 3 பேரை போலீசார் பிடித்து கைது செய்தனர்.

இதுதொடா்பாக வீடியோ ஒன்று ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், முகமூடி அணிந்த நபர்கள் கைகளில் பை, பெட்டி போன்றவற்றுடன் தப்பிச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த கொள்ளை சம்பவத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கத்து கடைக்காரர்கள், உடனடியாக தங்கள் கடைகளை பூட்டிவிட்டு தப்பியோடினர்.

அமெரிக்காவில் நடைபெறும் இதுபோன்ற தொடர் கொள்ளை சம்பவம் மக்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

Views: - 265

0

0