நீருக்கடியில் வெடித்துச் சிதறிய 2ம் உலகப்போர் குண்டு….!!(வீடியோ)

14 October 2020, 11:30 am
world bomb blast - updatenews360
Quick Share

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டை செயல் இழக்கச் செய்ய முயற்சித்தபோது நீருக்கு அடியில் வெடித்து சிதறியது.

வார்சா: உலக நாடுகளுக்கு இடையே கடந்த 1939ஆம் ஆண்டு முதல் 1945ஆம் ஆண்டு வரை இரண்டாவது உலகப் போர் மூண்டது. இந்தப் போரின் போது தான் முதன் முறையாக அணு ஆயுதம் பயன்படுத்தப்பட்டது. அதன் தாக்கம் இன்று வரை நீள்வதோடு, மீண்டும் ஒரு அணு ஆயுதம் பயன்படுத்தப்படக் கூடாது என்பதில் உலக நாடுகள் கவனமாக இருந்து வருகின்றன.

இதற்கிடையில் 2ம் உலகப் போரின் போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டுகள் பல்வேறு இடங்களில் அவ்வபோது கண்டெடுக்கப்படுகின்றன.

அவற்றில் பல குண்டுகள் செயலிழந்த நிலையில் இருந்தாலும், சில குண்டுகள் இன்றும் வெடிக்கக்கூடிய நிலையில் இருக்கின்றன. அந்த வகையில் போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் 2-ம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த வெடிகுண்டு கடந்த 1945ம் ஆண்டு பிரிட்டன் வீசிய டால்பாய் வெடிகுண்டு என்றும் அதன் எடை 5 ஆயிரத்து 400 கிலோ என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வெடிகுண்டை செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக நீருக்கடியில் அந்த குண்டு வெடித்துச் சிதறியது. இதனால் தண்ணீர் மேல நீண்ட உயரத்திற்கு மேல்எழுந்தது. இருப்பினும் நீருக்கடியில் வெடித்ததில் எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை எனக் கூறியிருக்கும் அந்நாட்டு அதிகாரிகள், தற்போது ஆபத்து நீங்கியதாக தெரிவித்துள்ளனர்.

Views: - 49

0

0