மசூதியில் ஒரே நேரத்தில் அனைத்து ஏர் கண்டிஷனர்களும் வெடிப்பு..! 12 பேர் பலி..! வங்கதேசத்தில் சோகம்..!

5 September 2020, 4:04 pm
explosion_updatenews360
Quick Share

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் புறநகரில் உள்ள ஒரு மசூதியில் ஆறு ஏர் கண்டிஷனர்கள் வெடித்ததில் ஒரு குழந்தை உட்பட சுமார் 12 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 25’க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாராயங்கஞ்ச் நதி துறைமுக நகரத்தில் உள்ள மசூதியில் நேற்று இரவு 9 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது.

ஒரு குழந்தை நேற்றே உயிரிழந்த நிலையில், காயமடைந்த மற்ற அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி 11 பேர் இன்று இருந்துள்ளதாக டாக்டர் சமந்தா லால் கூறினார்.

மேலும் 25 பேர் இப்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தீக்காயங்கள் காரணமாக அவர்களின் உடலில் 90 சதவீதத்திற்கும் அதிகமான சேதம் ஏற்பட்டுள்ளதால் அவர்களின் நிலை மிகவும் ஆபத்தாகவே உள்ளது என்று அவர் கூறினார்.

கசிந்த குழாய் வரியிலிருந்து எரிவாயு குவிந்ததால் தீ விபத்து ஏற்பட்டு ஏசி வெடிப்பைத் தூண்டி இருக்கக்கூடும் என்று தீயணைப்பு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

“மசூதிக்கு அடியில் டைட்டாஸ் கேஸ் குழாய் ஒன்று செல்கிறது. ஜன்னல்கள் மூடப்பட்டதால் குழாயிலிருந்து எரிவாயு கசிந்து உள்ளே குவிந்திருப்பதாக நாங்கள் சந்தேகிக்கிறோம். யாரோ ஏ.சி.க்கள் அல்லது பேன்களை இயக்க அல்லது அணைக்க முயன்றபோது தீப்பொறிகள் காரணமாக வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம்.” என நாராயங்கஞ்ச் தீயணைப்பு சேவையின் துணை உதவி இயக்குநர் அப்துல்லா அல் அரேஃபின் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்பு சேவை துறைகள் தனித்தனியாக விசாரணைகளை ஆரம்பித்துள்ளன. விசாரணையின் முடிவிலேயே உண்மையான காரணம் தெரிய வரும்.

இதற்கிடையே மசூதியில் இருந்த அனைத்து ஏ.சி.’க்களும் ஒரே நேரத்தில் வெடித்து விபத்து ஏற்பட்டதை அடுத்து ஏதேனும் தீவிரவாத தாக்குதலோ என அப்பகுதி மக்கள் சிறிது நேரம் அச்சத்தில் உறைந்து போனதாக கூறினர்.

Views: - 0

0

0