நியூ யார்க் மக்களுக்காக இந்தியர்கள் செய்த அற்புதமான காரியம். மாதவன் வெளியிட்ட வீடியோ…!

24 March 2020, 4:18 pm
Quick Share

உலகத்தின் அழிவின் ஆரம்பமென்று சித்தரிக்கப்படும் இந்த கொரோனா வைரஸால் பாதிப்படைந்தோரின் எண்ணிக்கை பல்மடங்காக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது வேகமெடுத்து பரவும் இந்த வைரஸால் இதுவரை 434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெவ்வேறு மாநிலங்களில் ஒன்பதுப்பேர் தங்களது உயிரை இழந்துள்ளனர்.


இந்நிலையில் தற்போது ஐரோப்பிய நாடுகளுக்கடுத்து அமெரிக்கா நாடுகளிலும் இந்த கொரோனாவால் பாதிப்பு தொடங்கியுள்ளது. அங்குள்ள முக்கிய நகரமான நியூயார்க்கில் சுய தனிமைப்படுத்துதலை அரசாங்கம் வற்புறுத்தியதால் எப்போதும் ஜொலிஜொலிக்கும் அந்நகரம் நேற்றிலிருந்து வெறிச்சோடி காணப்பட்டது.


அங்குள்ள மக்கள் தங்கள் அன்றாட தேவையான உணவிற்கு நித்தம் போராடிக்கொண்டிருந்த வேலையில் வாழ்ந்து வந்த இந்திய நாட்டை சேர்ந்த சீக்கியர்கள் 30000 அங்கிருந்த பேருக்கு சிறந்த சுகாதாரமான முறையில் உணவளித்துள்ளனர். உணவை தயாரிக்கும் பொழுது எடுத்த வீடியோ ஒன்றினை பிரபல இந்திய நடிகர் இணையதளத்தில் ஷேர் செய்துள்ளார்.