அமெரிக்க தூதரை கொல்ல ஸ்கெட்ச் போட்ட ஐஎஸ்ஐஎஸ்..! பக்காவாக ஸ்கெட்ச் போட்டு பயங்கரவாதிகளை முறியடித்த ஆப்கன் உளவுத்துறை..!

12 January 2021, 8:12 pm
Afghanistan_UpdateNews360
Quick Share

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் இன்று காபூலில் அமெரிக்க உயர்மட்ட தூதரை படுகொலை செய்வதற்கான ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் திட்டத்தை ஆப்கானிஸ்தான் பாதுகாப்புத்துறை தோல்வியுறச் செய்ததாகக் கூறினர்.

அமெரிக்க உயர்மட்ட தூதர் ரோஸ் வில்சன் மற்றும் ஆப்கானிய அதிகாரிகளை கொலை செய்ய திட்டமிட்டிருந்த, கிழக்கு மாகாணமான நங்கர்ஹாரில் நான்கு உறுப்பினர்களைக் கொண்ட ஐஎஸ்ஐஎஸ் குழுவை உளவுத்துறை அதிகாரிகள் அழித்தனர் என்று தேசிய பாதுகாப்பு இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய மாதங்களில் பத்திரிகையாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உட்பட பல முக்கிய நபர்களை தலைநகரம் காபூல் மற்றும் பிற நகரங்களில் வைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி கொலை செய்து வருவதற்கு அமெரிக்க தூதர் வில்சன் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“குழுவின் பிரதான கொலையாளி மற்றும் அமைப்பாளர் அப்துல் வாகேத் ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரையும் சில உயர் ஆப்கானிய அதிகாரிகளையும் படுகொலை செய்ய திட்டமிட்டிருந்தார்” என்று தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

“அவர்கள் கைது செய்யப்பட்டதன் மூலம் அவர்களின் திட்டம் தோல்வியடைந்தது.” என மேலும் தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை தேசிய பாதுகாப்பு இயக்குனரகம் வழங்கவில்லை. காபூலில் உள்ள அமெரிக்க தூதரகமும் இது குறித்து எந்த கருத்துக்களையும் வெளியிடவில்லை.

Views: - 7

0

0