கத்தார் சென்ற அமெரிக்கா விமானத்தின் சக்கர பகுதிகளில் மனித உடல் பாகங்கள் கண்டெடுப்பு!

Author: kavin kumar
18 August 2021, 10:04 pm
Quick Share

ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடலின் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதையடுத்து அந்நாட்டில் இருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். குறிப்பாக, காபூலில் இருந்து கடந்த திங்கட்கிழமை அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான சி-17 குளோபல்மாஸ்டர் விமானம் ஒன்று கத்தார் சென்றது.அந்த விமானத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் பயணம் செய்தனர். மொத்தம் 640 பேர்கள் நிரம்பிய அமெரிக்க விமானப்படை விமானத்தின் படம் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அமெரிக்க விமானம் புறப்பட்ட சமயத்தில் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்கள் விமானத்தை சுற்றிவளைத்து அதில் ஏற முயற்சித்தனர்.

மேலும், பலர் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்து மிகவும் ஆபத்தான பயணம் மேற்கொண்டனர். விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தின் சக்கர பகுதியில் அமர்ந்திருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து கீழே வீழ்ந்து உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் இருந்து புறப்பட்டு கத்தாரில் தரையிறங்கிய அமெரிக்க விமானத்தின் சக்கர பகுதியில் மனித உடல்பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க விமானப்படை தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Views: - 282

0

0