தலிபான்கள் ஆட்சியில் அடுத்தடுத்து உயிரிழக்கும் மக்கள் : மசூதியில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 16 பேர் பலி

Author: Babu Lakshmanan
15 October 2021, 4:26 pm
afghan blast -updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தான் : ஆப்கானிஸ்தானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பில் 16 பேர் பலியாகினர்.

தலிபான்கள் கைப்பற்றிய பின் ஆப்கானிஸ்தானில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து அந்நாட்டு மக்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று கந்தஹார் நகரில் அமைந்த மசூதியில் வழக்கம்போல் தொழுகை நடைபெற்றது. ஷியா பிரிவு முஸ்லீம்களுக்கான இந்த மசூதியில் திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 16 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், தொடர்ச்சியாக பொதுமக்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 522

0

0