ஆப்கனில் பிரபல நகைச்சுவை நடிகர் கடத்தி கொடூரக் கொலை : வீடியோ வெளியாகி அதிர்ச்சி..!!

Author: Babu
28 July 2021, 8:13 pm
Quick Share

ஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகர் கடத்தி கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நசார் முகமத். கந்தகார் பகுதியைச் சேர்ந்த இவர், நடிகராவதற்கு முன்பு ஆப்கானிஸ்தான் காவல்துறையில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்கள் வீட்டுக்கேச் சென்று நடிகர் நசார் முகமத்தை கடத்திச் சென்று கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு முன்பாக காரில் வைத்து சிலர் அவரை அடிக்கும் வீடியோ வளியானது.

இதனிடையே, தலிபான்கள்தான் நசார் முகமத்தை கடத்தி கொலை செய்ததாக அவரது குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். ஆனால், இந்தக் குற்றச்சாட்டை தாலிபான்கள் அமைப்பு மறுத்துள்ளது.

Views: - 387

0

0