ஆஃப்கான் வெள்ளப்பெருக்கு : இதுவரை 72 பேர் பலி.?

27 August 2020, 10:23 am
Quick Share

ஆஃப்கான் தலைநகர் காபூலுக்கு வடக்கே ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கில் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது.

ஆஃப்கான் தலைநகர் கபூல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு கனமழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் கபூலின் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை சுமார் 72 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படை அதிகாரிகள் மற்றும் அரசு துறையை சேர்ந்த அதிகாரிகள் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட சிலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எதிர்பாராத விதமாக நிகழ்ந்த இந்த விபத்தில் உறவுகளை இழந்து ஏராளமானோர் தவித்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் பலர் ஆறுதல் கூறியுள்ளனர்.

Views: - 19

0

0