இனிமே நாங்க படிக்க முடியாதா..? ஆப்கனில் மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிக்கு வர தடை… தலிபான்களின் அடுத்த அட்டூழியம்!

Author: Babu Lakshmanan
18 September 2021, 3:54 pm
afghanistan girls - updatenews360
Quick Share

ஆப்கானிஸ்தானில் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்க தலிபான்கள் அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கப் படைகள் வெளியேறியதை தொடர்ந்து ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் கைப்பற்றினர். தலிபான்களின் இடைக்கால அரசை ஏற்க விரும்பாத உள்ளூர் மக்கள் முதல் வெளிநாட்டவர் வரை, படிப்படியாக அண்டை நாடுகளுக்கும், சொந்த நாடுகளுக்கும் இடம்பெயர்ந்து வருகின்றனர். இதனிடையே, யாரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டாம் என தலிபான்கள் கேட்டுக் கொண்டனர்.

மேலும், 1996 – 2001ம் ஆண்டு வரை இருந்த அரசைப் போல தற்போதைய தலிபான் அரசு இருக்காது என்றும், பெண்களுக்குக் கல்வி உரிமை, வேலைக்குச் செல்லும் உரிமை வழங்கப்படும் எனவும் உறுதியளித்தனர். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் பள்ளிகளில் ஆண்கள், பெண்கள் பார்க்க முடியாதவாறு திரையிடுவது உள்ளிட்ட அனைத்து விவகாரங்களும் மாறுபட்டதாகவே காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, பெண்கள் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதித்தனர்.

ஆப்கானிஸ்தானில் படிப்படியாக பெண்களுக்கான உரிமையை மறுத்து வரும் நிலையில், தற்போதைய உத்தரவும் உலக நாடுகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கனின் எமிரேட் அரசில் அனைத்து தனியார், அரசுப் பள்ளிகள், மதரீதியான பள்ளிகளை இன்று முதல் திறக்கலாம் என்றும், ஆனால், மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே பள்ளிக்கு வர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பெண்களுக்கான கல்வி உரிமையும் பறிக்கப்பட்டு விட்டது.

மாணவிகளை புறக்கணித்து தலிபான்கள் விடுத்துள்ள இந்த அறிவிப்பால், ஆசிரியைகள், மாணவிகளின் எதிர்காலம் குறித்து சர்வதேச கல்வியாளர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

Views: - 382

0

0