காபூல் விமான நிலையம் அருகே மனித வெடிகுண்டு தாக்குதல்: குழந்தைகள் உட்பட 13 பேர் பலி

Author: Udhayakumar Raman
26 August 2021, 9:33 pm
Quick Share

காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு, வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் வெளியேறி வருகின்றனர். தற்போது, காபூல் விமான நிலையம் மட்டுமே இருந்து வரும் நிலையில், அங்கு குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “காபூல் விமான நிலையம் அருகே மனித வெடிகுண்டு வெடித்துள்ளதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மனித வெடிகுண்டு தாக்குதலில் குழந்தைகள் உட்பட 13 பேர் பலி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 290

0

0