சத்தியமா… இந்த நிலைமை எந்த நாட்டுக்கும் வரக் கூடாது : ஆப்கனில் காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடிப்பு

Author: Babu Lakshmanan
26 August 2021, 8:32 pm
Quick Share

ஆப்கானிஸ்தானை விட்டு மக்கள் வெளியேறி வரும் நிடிலையில், காபூல் விமான நிலையம் அருகே குண்டுவெடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் ஆப்கானிஸ்தான் வந்த பிறகு, வெளிநாட்டவர்கள் மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களும் வெளியேறி வருகின்றனர். தற்போது, காபூல் விமான நிலையம் மட்டுமே இருந்து வரும் நிலையில், அங்கு குண்டு வெடித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க பொது விவகாரங்களுக்கான உதவி பாதுகாப்பு செயலாளர் ஜான் கிர்பி விடுத்துள்ள டுவிட்டர் பதிவில், “காபூலில் குண்டுவெடித்துள்ளது. உயிரிழப்புகளின் எண்ணிக்கை குறித்து இதுவரை தெரியவில்லை,” என தெரிவித்துள்ளார்.

Views: - 250

0

0